கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷ கைது!

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷ நேற்று இரவு (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

தெமட்டகொட, கென்ட் வீதியில் அமைந்துள்ள காணி ஒன்று தொடர்பான தகராறில் அதன் உரிமையாளர் மற்றும் அவரது மகளை திட்டி கொலை மிரட்டல் விடுத்த காரணத்துக்காக குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் அரச அதிகாரிகள் குழுவுடன் குறித்த காணிக்கு சென்றபோது, ​​வீட்டு உரிமையாளரையும் அவரது மகளையும் இவ்வாறு மிரட்டியுள்ளார்.

கைது செய்யப்பட்ட கித்சிறி ராஜபக்ஷ இன்று (29) புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply