தனக்கும் வெளியிலிருந்து உணவு கொண்டுவர அனுமதிக்க வேண்டும் – சாமர சம்பத் எம்.பி. கோரிக்கை!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளிடம் வெளியில் இருந்து உணவு கொண்டு வர அனுமதிக்குமாறு எழுத்துப்பூர்வ கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் வசதியே நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கண்டி தும்பர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வர சிறைச்சாலை அதிகாரிகள் சமீபத்தில் அனுமதி வழங்கியிருந்த நிலையில் சாமர சம்பத் எம்.பி தனக்கும் வெளியில் இருந்து உணவு கொண்டு வர அனுமதிக்குமாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply