அம்பலாந்தோட்டை பகுதியில் இன்று (31) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் கொக்கல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த நபர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடாத்திய துப்பாக்கி சூட்டினால், குறித்த நபர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பலாந்தோட்டை, கொக்கல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் நீண்ட காலமாக இருந்த வந்த தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
