இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ள பால் சார்ந்த உணவுகளின் விலைகள்!

நாட்டில் இன்று (31) நள்ளிரவு முதல் பால் சார்ந்த உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,

பால் மாவின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பால் தேநீர் தவிர, பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அனைத்து வகையான பழச்சாறுகளின் ஒரு கோப்பையின் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும்.

இது தவிர, பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சீஸ், உள்ளிட்ட பல வகையான உணவுப் பொருட்களின் விலையும் 10 ரூபாவால் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply