குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர்!

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று (31) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கொழும்பு குற்றப்பிரிவில் பணியாற்றிய ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் இறந்தமை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னியலையாகினார்.

வழக்கு தொடர்பான விபரங்கள் முன்னாள் அமைச்சருக்குத் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இது தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply