இன்று (31) நள்ளிரவில் முதல் மாதாந்திர எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைவடைந்து வரும் நிலையில், நாட்டில் எரிபொருள் விலை குறையக்கூடும் என்று எதிர்பாக்கப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த மாதம் அரசாங்கம் எரிபொருள் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
