மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் பலி!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள சொகுசு ரக ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் அடையாளம் பொலிஸாரால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

உயிரிழந்தவர் அந்த ஹோட்டலில் ஒரு அறையில் தங்கியிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த நபர் உயிரிழப்பதற்கு முன்னர் எழுதிய ஒரு கடிதமும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், “மன்னிக்கவும், அம்மா, நான் மிகவும் சோர்ந்து விட்டேன். நான் எப்போதும் மனதால் வருந்திக் கொண்டிருக்கிறேன்…” என்று எழுதப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply