நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்று உத்தரவு!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தங்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்தனர்.

இவற்றை ஆராய்ந்த பின்பு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவைப் பிறப்பித்தது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply