பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கைதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலையை சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
