மோடியின் இலங்கை வருகைக்கு எதிராக சுவரொட்டி- பொலிஸாரிடம் சிக்கிய இளைஞர்கள்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயத்தை மேகொள்ளவுள்ளார்.

இந்த நிலையில் அவரது வருகைக்கும், கையெழுத்தாகும் ஒப்பந்தங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு இளைஞர்கள் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த நிலையில் அவர்களிடம் இருந்து பல சுவரொட்டிகளை பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.

எனினும் குறித்த இளைஞர்களை கைது செய்யவில்லை என்றும் அனைத்து சுவரொட்டிகளும் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்த அனைத்து சுவரொட்டிகளையும் அகற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply