வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணிநகர் பகுதியில் நேற்று பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலடி பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மகனுக்கும், தாய்க்கும் இடையில் ஏற்பட்ட தகராறு அதிகரிக்கவே, மகன் தாக்கியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட உடைந்த துடைப்பம் மற்றும் தடி ஆகியவை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொலை சம்பவம் தொடர்பில் 42 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதிக்கு.
