குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நாமல்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட தனது பாட்டி டெய்சி ஆச்சி என்று அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் தான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாவது என்பது ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply