தனிப்பட்ட தகராறு- ஒருவர் பலி!

மொரகொட பொலிஸ் பிரிவின் மானங்கட்டிய பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மானங்கட்டிய, மெகொடவெவ பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

மொரகொட பொலிஸ் பிரிவின் மானங்கட்டிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்ததாக மொரகொட பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடிப்டையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்த தாக்குதலால் குறித்த நபர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

குறித்த நபர் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது, உயிரிழந்தவரின் மைத்துனர் மற்றும் அவரது மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக மாறியதன் விளைவால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கொலை சம்பவம் தொடர்பில் 50 வயது சந்தேக நபரும் 43 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை மொரகொட பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply