கட்டுநாயக்க 18 ஆம் தூண் பிரதேசத்துக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் இன்று மதியம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
சம்பவத்தில் ஆண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் சீதுவை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஆவார்.
துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் போலீசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
