அமெரிக்காவின் புதிய வரி கொள்கை- ட்ரம்ப்புக்கு கடிதம் எழுதிய ஜனாதிபதி அநுர!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இறக்குமதி வரி கொள்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ட்ரம்ப்புக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இதனை குறிப்பிட்டார். அத்துடன் வெள்ளை மாளிகை கடிதம் பெறப்பட்டதை ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தனது கடிதத்தில் அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள புதிய வரி கொள்கை தொடர்பில் தாக்கத்தைக் குறைப்பதற்கான சாத்தியமான வழிகள் மற்றும் இலங்கை எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வரிகளைக் குறைக்க ஒத்துழைக்குமாறும் அந்த கடிதத்தில் கோரியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 வீத வரி விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply