நீரில் முழ்கி உயிரிழந்த இளைஞர்- இளைஞனின் மரண செய்தி கேட்டு உயிர் மாய்த்த காதலி!

யாழ். தென்மராட்சி, வரணி சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தவசிக்குளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவராசு சிலுசன் என்ற 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,

சுமார் எட்டுப் பேர் அடங்கிய நண்பர்கள் குழு ஒன்று சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராட சென்றுள்ளனர்.

இதன்போது மேற்படி இளைஞர் தாமரைக் கொடியில் சிக்குண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞனின் சடலம் மிதப்பதாக பொலிசாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த இளைஞனின் இறப்பு செய்தி கேட்டு அவருடைய காதலி, இன்று (18) அதிகாலை வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரணி பகுதியைச் சேர்ந்த 18 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இறந்த பெண்ணின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply