ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கேபின் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கேபின் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விமானத்தில் உணவு கொடுப்பனவை மறு ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கேபின் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்த போதும், சரியான தீர்வு கிடைக்கப்பெறவில்லை.

இதனால் பணி நேரத்திற்கு ஏற்றவாறு வேலை நிறுத்த போராட்டத்தை ஏப்ரல் மாதத்தில் தொடங்கியதாக சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அதற்கமைய அவர்கள், பணிப் பட்டியல்களின்படி பணிபுரிவார்கள் என்றும், குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே பணியாளர் மையத்திலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் சங்கம் வலியுறுத்தியது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தற்போது சாதகமான வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், கோவிட் தொற்றுநோய்களின் போது செய்யப்பட்ட கொடுப்பனவு நிறுத்தங்களை மீண்டும் வழங்குமாறு கேபின் குழு உறுப்பினர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply