இன்று முதல் ‘சிறி தலதா வழிபாடு’ ஆரம்பம்!

16 ஆண்டுகள் கழித்து “சிறி தலதா வழிபாடு” இன்று முதல் ஆரம்பமாகின்றது.

இன்று (18) பிற்பகல் 12.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொள்ள உள்ளதோடு, வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின்படி, மல்வத்து, அஸ்கிரி தேரர்களின் அனுசரனையுடன் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமேவின் வழிகாட்டுதலின் கீழ், இன்று முதல் ஏப்ரல் 27ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

ஆரம்ப நாளான இன்று பக்தர்கள் தலதா புனித தந்த தாதுவை வழிபடுவதற்கான வாய்ப்பு பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் நாளை மறுநாள் (19) முதல் தினசரி பிற்பகல் 12.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply