கட்டுநாயக்க ஹீனடியன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத சந்தேகநபர்கள் இந்த துப்பாக்கி சூட்டை நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்த நபர் தனது வீட்டில் இருந்தபோதே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
காயமடைந்த நபர் முதலில் மினுவாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
