ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை இன்னும் ஐந்து வருடங்களில் முற்றாக ஒழிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
உலகத்தில் உள்ள மிக மோசமான பரீட்சை ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை.
இந்த பரீட்சை தடை செய்யப்படாததால், வசதி வாய்ப்புகள் உள்ள பாடசாலைகளுக்கு பின் தங்கிய பாடசாலை மாணவர்கள் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போகின்றது.
எதிர்காலத்தில் பின் தங்கிய பாடசாலைகளை இல்லாமல் செய்யப்பட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
மேலும் எதிர்வரும் ஐந்து வருடங்களில் ஐந்தாம் வகுப்பு புலமை பரிசில் பரீட்சை முற்றாக இல்லாதொழிக்கப்படும் என்றும் ஷாந்த பத்மகுமார தெரிவித்துள்ளார்.
