சுவிஸில் பண மோசடியில் சிக்கிய தமிழ் இளைஞன்!

சுவிட்சர்லாந்து- செங்காளன் மாநிலத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

குறித்த இளைஞனின் தொலைபேசிக்கு, புதிய ஐபோனை பரிசாக பெற்றுள்ளதாக குறுந்தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனை உண்மையென நம்பிய இளைஞன், அதிலுள்ள லிங்கினை கிளிக் செய்து, அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அதன்பின்பு சில நிமிடங்களில் இளைஞனின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் பெறப்படும் அறிவுறுத்தல் வந்துள்ளது.

இதன்போது வங்கியில் நிலுவையில் இருந்த சுமார் 1300 பிராங்குகள் மோசடியாளர்களினால் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.

இவ்வாறான மோசடிகளில் சிக்கி பல தமிழர்கள் பணத்தை இழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply