நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் இறைபதம் அடைந்தமை சைவசமயத்திற்கு பேரிழப்பாகும்!

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இறைபதம் அடைந்தமை சைவசமயத்திற்கு பேரிழப்பாகும் என இந்தியாவின் தருமை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கவலை வெளியிட்டுள்ளார்.

இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்காக வெளியிட்ட இறை பிரார்த்தனை செய்திக் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த செய்தியில்,

யாழ்ப்பாணத்தில் சைவத்தை வளர்க்க மதுரை ஆதீனம் 291 ஆவது மகாசந்நிதானம் அவர்களால் தோற்றுவிக்கப்பெற்று தம்முடைய கதாகலேஷத்தால் சமயத்தை, புராணத்தை மாதகணக்கில் சொற்பொழிவாற்றிய சாமிநாத சுவாமிகளுக்கு பின் இரண்டாம் பட்டமாக தருமை ஆதீனத்தில் முறையாக காஷாயம் தீட்சைகள் பெற்று ஈழத்தமிழர் வாழும் தேசந்தோறும் பல மாநாடு நிகழ்வுகளில் பங்கேற்று சமயம் பரப்பியவர்.

நாம் மாவிட்டபுரம் கும்பாபிஷேகம் தரிசிக்க சென்றபோது கூட சித்தாந்த மாநாட்டிற்கு அழைப்பு விட்டோம். இந்தியாவில் தங்கி மருத்துவம் பார்க்கலாம் என்றோம். வருகிறேன் என்று கூறி மகிழ்ந்தவர் மாநாடு தொடக்கத்தில் முதல்நாள் பரிபூர்ணம் எய்தியமையால் தாங்முடியாது துயறுருகின்றோம்.

சைவம் காக்கும் தூண்சரிந்தது. தக்கவர்கள் அம்மடத்தின்னின்று சமயத்தை காக்க செந்தமிழ் சொக்கன் திருவருளை சிந்திக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply