இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் கைது!

ரயில்வே திணைக்களத்தை சேர்ந்த சுற்றுலா பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரினால் கொடுக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

குறித்த முறைப்பாட்டாளர் கடந்த ஏப்ரல் 28ஆம் திகதியன்று கொம்பனித்தெரு ரயில் நிலையம் வழியாக செல்லுபடியாகும் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, சுற்றுலா பயணச்சீட்டு பரிசோதகரினால், முறைப்பாட்டாளரின் தேசிய அடையாள அட்டை அவரது காவலில் எடுக்கப்பட்டது.

இந்த வேளையில் சுற்றுலா பயணச்சீட்டு பரிசோதகர், அந்த தேசிய அடையாள அட்டையை திருப்பித் தருவதற்காக 3,000 ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரியுள்ளார்.

எனினும், நேற்று (2) அவர் அந்த தொகையை 1,500 ரூபாவாகக் குறைத்து, இலஞ்சமாகப் பெறும்போது கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply