சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் சரித் தில்ஷானின் மரணம் தொடர்பில், மேலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 04 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் நேற்று (05) உத்தரவு பிறப்பித்தது.
சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் 4 மாணவர்கள் சமனலவெவ பொலிஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்தனர். இதனையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சரித் தில்ஷானின் மரணம் தொடர்பில் 08 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 11 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையிலேயே மேலும் இரு மாணவர்கள் சரித் தில்ஷானின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
