
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் என தெரிவித்து கொழும்பில் இன்று (08) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போது பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள இரமநாதன் இந்து மகளீர் கல்லூரிக்கு முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டத்தில், கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதிகோரி பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
குறித்த போராட்டம் காரணமாக கொழும்பில் உள்ள டூப்ளிகேஷன் வீதி முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவி சம்பந்தப்பட்டபாடசாலையிலன் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும்,அதன் விளைவாக மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் குறித்த ஆசிரியரையும் கைது செய்யுமாறு போராட்டகாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
எனவே குறித்த மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.