வெசாக் பௌர்ணமி தினத்தில் தையிட்டி விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம்!

தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் காணிகளை அபகரித்து கட்டப்பட்ட திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்ட காலத்தில் இருந்து, குறித்த விகாரைக்கு எதிராக தொடர்ந்துவரும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், காணியின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து தொடர்ச்சியான போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

பௌத்த மக்களால் இன்றைய தினம் புனித வெசாக் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றையதினமும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டம் நடைபெறும் இடத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply