
புனித வெசாக் தினத்தை முன்னிட்டு, வெசாக் வலயங்கள் செயற்படுத்தப்படும் காலப்பகுதிக்குள் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரியளவிலான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வெசாக் வலயங்களை அண்மித்து விசேட போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.