முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு அதனை நினைவுகூரும் வகையில் யாழ். பல்கலை மாணவர்கள் உணர்வுபூர்வமான செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இன்றைய தினம் யாழ். பல்கலையில் “குருதியால் தோய்ந்த நம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி” எனும் கருப்பொருளில் இரத்ததான நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு குருதிக்கொடையில் ஈடுபட்டனர்.
தமிழ், சிங்கள, முஸ்லீம் மாணவர்கள் என அனைவரும் இனம், மதம், மொழி பேதங்களை கடந்து இந்த இரத்ததான முகாமில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

