
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ் பல்கலை மாணவர்கள் உணர்வுபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.
அதன்படி தமிழினப்படுகொலையை நினைவுகூரும் வகையில் “நினைவாயுதம்” கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.
குறித்த கண்காட்சி யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இறுதி யுத்தத்தில் எமது தமிழ் சொந்தங்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட வரலாற்றினை, எமது உறவுகள் அனுபவித்த வலியினை அடுத்த சந்ததியினருக்கு எடுத்து செல்லும் முகமாக இக் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.