சாமர சம்பத் தசநாயக்க எம்.பிக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் விடுவிக்க பதுளை நீதவான் இன்று (19) உத்தரவிட்டுள்ளார்.

சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பான பிணை மனுவை பரிசீலித்த பதுளை நீதவான், 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிக்க அனுமதி வழங்கினார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply