
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஊழல் குற்றச்சாட்டின் கீழ் மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று (20) கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.