மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் செய்தல் மற்றும் புதிய ஆட்சேர்ப்பு செயல்முறையை செயல்படுத்தாமை ஆகிய இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் கடந்த 16ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இது தொடர்பான பேச்சு வார்த்தை இன்றும், நாளையும் இடம்பெறுகின்றது.
இந்த பேச்சுவார்த்தைகளில் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றால், மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தொடருந்து பொதுமுகாமையாளருடன் நேற்று நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
