
இலங்கை மத்திய வங்கி அதன் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த தீர்மானித்துள்ளது.
அதன்படி நேற்று (21) இரவு நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் பணவியல் கொள்கை சபையானது இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகளைக் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர், இலங்கை மத்திய வங்கியின் பணவியல் கொள்கை சபை ஓரிரவு கொள்கை வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 7.75 சதவீதமாக மாற்றத் தீர்மானித்துள்ளது.
நாணயக் கொள்கை நிலையின் அளவிடப்பட்ட இத்தளர்த்தலானது உலகளாவிய நிச்சயமின்மைகள் மற்றும் தற்போதைய குறைவடைந்த பணவீக்க அழுத்தங்கள் என்பவற்றிற்கு மத்தியில் பணவீக்கத்தை 5 சதவீதம் கொண்ட இலக்கினை நோக்கி வழிநடாத்துவதில் ஆதரவளிக்குமென சபை அபிப்பிராயப்படுகின்றது.