இலங்கை அணியின் முன்னாள் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தனது X வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதில், எதிர்வரும் ஜூன் மாதம் 17 முதல் 21 ஆம் திகதி வரை காலியில், பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த விளையாட்டின் மீதான காதல் எப்போதும் தீராது என்றும், கடந்த 17 ஆண்டுகளாக இலங்கைக்காக டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் விளையாடக் கிடைத்தமை பெருமிதமானதும், மகிழ்ச்சியானதுமாகும் என்றும் எஞ்சலோ மெத்திவ்ஸ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,167 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
