பல்கலையில் ராக்கிங் செய்ய வேண்டாம் என தெரிவித்த மாணவியின் கன்னத்தில் அறைந்த மாணவன்- பொலிசார் எடுத்த நடவடிக்கை!

பல்கலைக்கு வரும் புதிய ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்ய வேண்டாம் என தெரிவித்த சக மாணவியின் கன்னத்தில் அறைந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் ஒருவரை ஏறாவூர் பொலிசார் நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கிழக்கு பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்தில் 3ஆம் ஆண்டில் கல்வி கற்று வரும் சிங்கள மாணவர்களுக்கிடையே, புதிதாக பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவர்களை ராக்கிங் செய்வது தொடர்பாக இடம்பெற்ற வாக்குவாத்தின் போது மாணவி ஒருவர் ராங்கிங் செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார்

அதையடுத்து சக மாணவன் ஒருவர் குறித்த மாணவியின் கன்னத்தில் அறைந்துள்ளர்.

இதனால் மாணவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, தாக்கிய சக மாணவனை நேற்று இரவு பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply