
நியூஸிலாந்து துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இன்று இலங்கைக்கு வருகைதர உள்ளார்.
இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் உட்பட பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளார்.
வர்த்தகம், முதலீடு, விவசாயம், கல்வி, சுற்றுலா மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அவருடைய இந்த பயணம் அமைந்துள்ளது.