மறைந்த சிங்கள திரையுலகின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை இன்று (26) அரச அனுசரணையுடன் கொழும்பு 7 சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறுகின்றது.
‘இலங்கை சினிமாவின் ராணி’ என்று அழைக்கப்படும் மாலினி பொன்சேகா கடந்த சனிக்கிழமை (24) தனது 78ஆவது வயதில் காலமானார்.
மாலினி பொன்சேகாவின் பூதவுடல் சுதந்திர சதுக்க வளாகத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
பிற்பகல் 3.30 மணியளவில் அவர் கல்வி கற்ற களனி குருகுலே கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் கலைஞர்களால் பௌத்த மதச் சடங்குகளுக்காக கட்டப்பட்ட விசேட மேடைக்கு அவரது பூதவுடல் கொண்டுச் செல்லப்படவுள்ளது.
பின்னர் மத சடங்குகள் நிறைவுற்ற பின்னர், அவர் திரையுலகுக்கு ஆற்றிய பங்களிப்பு மற்றும் திரைப் பயண வாழ்க்கை குறித்து கலைஞர்களின் விசேட உரைகள் இடம்பெறவுள்ளன.
பிற்பகல் 5.45 மணியளவில் மறைந்த நடிகை மாலினியின் பூதவுடலுக்கான இறுதிக் கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படும்.
