அரச நியமனம் கோரி பட்டதாரி போராட்டம்!

அரச நியமனம் கோரி பட்டதாரி ஒருவர் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று (26) போராட்டத்தில் ஈடுபட்டார்.

கடந்த 2022ஆம் ஆண்டு பட்டம்பெற்று வெளியேறிய சீ.எம் மொஹமட் சபீர் என்பவரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.

குறித்த நபர் மாம்பழ வியாபாரி போன்று கோர்ட் சூட் அணிந்து தனது பட்டத்தை கையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

கிண்ணியாவை சேர்ந்த குறித்த பட்டதாரி தெரிவிக்கையில்,

தாம் பட்டம் பெற்று வெளியேறிய காலத்தில் இருந்தே பலவகையான பரீட்சைகளை தாம் எழுதியதாகவும் இருப்பினும் இந்த அரச கட்டமைப்பானது தம்மைப் போன்ற பலரை இன்னமும் புறக்கணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்களை இந்த அரசு வழங்கத் தவறுகின்றபோது எதற்காக இந்த நாட்டிலுள்ளவர்கள் வீணாக பட்டம் பெற்று காலத்தினை வீணடிக்கவேண்டும் என இதன்போது அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply