வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரி மாணவி விவகாரம்- விசாரணைக்கு விசேட குழு நியமனம்!

வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தனது விடுதி அறையில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்காக விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் அதுதொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

சம்பவம் தொடர்பாக கல்லூரியின் முதல்வரிடமிருந்து விரிவான அறிக்கை ஒன்று பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்தில் விசாரணை ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், அனைத்து தேசிய கல்வியியல் கல்லூரி முறைமையின் நிர்வாக மற்றும் கல்வி நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை உடனடியாக மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply