நாடாளுமன்றத்தில் மாகாண சபைத் தேர்தல் (திருத்த) சட்டமூலம் ஒன்றை தனி உறுப்பினர் முன்மொழிவாக சமர்ப்பிக்க, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களால் திட்டமிடப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு தற்போது உள்ள தடைகளை நீக்குவதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும்.
இந்த சட்டமூலம் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என எம்.பி சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
