சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, கங்கை இஹல கோரள, கண்டி மாவட்டத்தில் பஸ்பகே கோரள, கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, புலத்கோஹுபிட்டிய, யட்டியந்தோட்டை மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையானது இன்று காலை 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply