
2025ஆம் ஆண்டுக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது தென் கொரியாவின் குமியில் நடைபெற்று வருகின்றது.
குமியில் உள்ள குமி சிவிக் அரங்கில் இடம்பெற்று வரும் 26ஆவது ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான 400 மீட்டர் இறுதிப் போட்டியில் இலங்கையின் ஓட்டப்பந்தய வீரர் கலிங்க குமாரேஜ் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
அவர் ஓட்ட இலக்கினை 45.55 வினாடிகளில் பூர்த்தி செய்து வெண்கலப் பதக்கம் வென்றார்.