
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் இடம்பெற்ற Expo Culinaire சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 04 தங்கப் பதக்கங்கள், 03 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெண்கலப் பதக்கங்கள் வெல்லப்பட்டுள்ளது.
மே 21 முதல் 23 ஆம் திகதி வரை நடைபெற்ற குறித்த போட்டியில் உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இந்த போட்டியில்,
யாழ்ப்பாணத்தை சேர்ந்த கஸ்தூரி ராமேஸ்வரன் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
நீர்கொழும்பில் வசிக்கும் எஃப். நிலுஃபா, இந்தப் போட்டியில் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
கொழும்பில் வசிக்கும் எம்.ஆர்.எஃப். ஃபஸ்லியா 02 தங்கப் பதக்கங்களையும் 01 வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
குறித்த மூன்று பெண்களும் முதல் முறையாக ஒரு சர்வதேச போட்டியில் பங்கேற்று இத்தகைய வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மூவரும் இன்று அதிகாலை 04.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.