161 உள்ளூராட்சி சபைகளின் பணிகள் இன்று (02) முதல் ஆரம்பமாகவுள்ளன.
நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைவாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இந்த சபைகளின் பணிகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியமாகும்.
அதன்படி ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவொன்றால் பெரும்பான்மை அதிகாரத்தை கொண்ட 161 உள்ளூராட்சி சபைகளின் பணிகளை இன்று ஆரம்பிக்க முடியும் என்றும், ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரம் குறித்து உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் கூடும் உள்ளூராட்சி சபைகளால் தீர்மானம் எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
