சட்டவிரோத அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது!

பொத்துவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லாஹூகல, கொடவெஹெர வனப் பகுதியில் வைத்து குறித்த மூவரும் நேற்று (01) கைது செய்யப்பட்டனர்.

பொத்துவில் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

பொத்துவில், அட்டாளைச்சேனை மற்றும் இரத்மலானை பகுதிகளைச் சேர்ந்த 40 மற்றும் 41 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply