ரம்புக்கனை – கப்பல பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொஸ்கஹகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் திருமணம் ஆனவர் என்பதுடன், திருமணத்திற்கு புறம்பான தகாத உறவு இருந்தமையால் அவரது கணவன் இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட நபர் அப்பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்புரம்புக்கனை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
