அரச பேருந்து விபத்து- தடைப்பட்ட போக்குவரத்து!

கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்று இன்று (02) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

திடீரென ஏற்ட்ட இயந்திர கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்து செங்குத்தான சரிவில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது பேருந்தில் சுமார் 20 பயணிகள் பயணித்துள்ளதாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் குறிப்பிட்டனர்.

பேருந்து விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, வீதியில் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply