அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு எதிராக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சிரந்த ஜயலத், இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளார்.
2025 ஜனவரி 18 மற்றும் 19ஆம் திகதிகளில் சுங்கத் திணைக்களத்தில் இருந்து சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் எவ்விதமான பரிசோதனைகளுமின்றி விடுவிப்பதற்கு கப்பற்றுறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க பணிப்புரை வழங்கியமையால் அவருக்கு எதிராக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சிரந்த ஜயலத் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
2025 ஜனவரி 18 மற்றும் 19ஆம் திகதிகளில் சுங்கத் திணைக்களத்தில் இருந்து சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் எவ்விதமான பரிசோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு கப்பற்றுறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க பணிப்புரை வழங்கியதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த கொள்கலன்களில் ஆயுதம், வெடிப்பொருட்கள் அல்லது தீங்கிழைக்கும் பொருட்கள் இருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக சுங்கத் திணைக்கள தொழிற்சங்கத்தினர் சந்தேகிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளோம்- என்று தெரிவித்தார்.
