பகிடிவதை காரணமாக குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (02) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகிலுள்ள ஆற்றில் குதித்த வேளையில் அருகில் இருந்த சிலரால் அவர் மீட்கப்பட்டு குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடாத்திய விசாரணையின் போது பகிடிவதை கொடுக்கப்பட்ட சம்பவத்தால் அவர் தற்கொலைக்கு முயன்றமை தெரியவந்துள்ளது.
அவர் தற்போது குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற போதிலும், அவரது நிலைமை மோசமாக இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் நடாத்திய விசாரணையில் சம்பவம் தொடர்பாக தொழில்நுட்பக் கல்லூரியின் நான்கு மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
