திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான தரம் உறுதி செய்யப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உள்நாட்டில் சோளம் கொள்வனவு செய்வதில் உள்ள சிரமத்தை கருத்திற்கொண்டு திரிபோஷா உற்பத்தியை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக ஒரு ஆண்டுக்குத் தேவையான உரிய தரப்படுத்தப்பட்ட சோள தொகையை இறக்குமதி செய்வதற்கு இலங்கை திரிபோஷா லிமிட்டட் நிறுவனத்துக்கு இறக்குமதி உரிமத்தை வழங்குவதற்காக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இலங்கை திரிபோஷா லிமிட்டட் நிறுவனத்தின் வருடாந்த சோளத்தின் தேவை 18,000 மெட்ரிக் தொன்கள் ஆகும் என்பதுடன், மாதாந்த தேவை 1,500 மெட்ரிக் தொன்கள் ஆகும்.
கர்ப்பணித் தாய்மார், பாலூட்டும் தாய்மார் மற்றும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள 06 மாதங்களுக்கு கூடிய சிசுக்கள் மற்றும் 05 வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் திரிபோஷா வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
